
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஊழியர்கள் இணைவு
நாடளாவிய ரீதியில் பல தொழிற்சாலைகள் இணைந்து இன்று மாபெரும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தொழிற் சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே இயங்குகிறது இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்
இதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயகக முடியாத நிலை ஏற்பட்டது இதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக மிகக் குறைவான அளவில் காணப்பட்டது
வங்கி ஊழியர்கள் பகிஸ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை
புகையிரத ஊழியர்கள் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகிற அதேவேளை அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது

