இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டதெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் 350 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி சனிக்கிழமை (24.12.2022) வைக்கப்பட்டது.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா, செயலாளர் சா.மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் திருமதி.பி.வேணுஷா, இணைப்பாளர் முகிலன், மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டுஉலர் உணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
