Monday, December 23, 2024

அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி

Must read


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் பல்வேறு சமாதான பேச்சுக்களிலும் கலந்து கொண்ட  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உயிரிழந்த 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வுபூரமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டுள்ளார்கள்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article