Monday, December 23, 2024

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவு ஆராதனை 

Must read

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனை ஆராதனை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்றைய தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

3ஆம் ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்வாராதனை சியோன் தேவாலய தலைமை போதகர் ரொசான் மகேசன் தலைமையில்  நடைபெற்றது.

இப் பிரார்த்தனை ஆராதனையில் மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தனர்.

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின்  லைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.  

இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.  

2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது.

முதலாவது தாக்குதல் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற புனித அந்தோனியார் கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பின் வடக்கே கிறித்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியான் கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடத்தப்பட்டது.   இந்த இரண்டாவது தாக்குதலில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர்.

தேவாலயங்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் உள்ள கிறித்தவ சீர்திருத்த சபையின் நற்செய்திப் பறைசாற்று இயக்கக் கோவிலான சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குறைந்தது 27பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பாடசாலையில் பயின்று வந்த சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. 300 இற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மருத்துவமனை தெரிவித்தது.

தாக்குதல்களுக்குள்ளான மூன்று 5-நட்சத்திர தங்கும் விடுதிகள்: சாங்கிரி-லா விடுதி, சின்னமன் கிராண்ட் விடுதி, கிங்ஸ்பரி விடுதி ஆகியனவாகும்.

சாங்கிரி-லா விடுதியில் காலை 08:57 மணிக்கு குண்டுவெடிப்பு நடைபெற்றது. விடுதியின்  உணவகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த காலை உணவு நேரத்தில் தாக்குதல் நடந்தது. இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரும் முதல் நாள் அங்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் உணவகத்திலும், மற்றவர் மூன்றாம் மாடியின் வேறோர் இடத்திலும் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article