Monday, December 23, 2024

மட்டக்களப்பில்  அமைதி வழிப்பிரார்த்தனை போராட்டம்!

Must read

மட்டக்களப்பு கரித்தாஸ் எகட் நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியமும் இணைந்து நடாத்திய அமைதி வழிப்பிரார்த்தனை போராட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம்  தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்துக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட கறித்தாஸ் எகட் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார் தலைமையில் அமைதியான முறையில் பிரார்த்தனையுடன் கூடிய எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடித்திருந்தனர்.

இதன்போது “எமது நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், ஏனைய அழிவகளிலிருந்தும் பாதுகாத்தருளும் பல்லின, பல்சமய மக்கள் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ அருள்தாரும்” எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு பல்சமய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு அம்பாரை மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை,  இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்டத்தின் தலைவர் அருள்கலாநிதி கே.ஜெரேமியா அருள்ராஜா, தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்குத்தந்தை எம்.ஸ்டனிஸ்லோஸ்,   சர்வமத ஒன்றியத்தின் உபதலைவர்  சாஜஹான் மௌலவி, மேலும் பல அருட்தந்தையர்கள், துறவிகள், சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article