மட்டக்களப்பு வாழைச்சேனை பாலைநகரில் சியா முஸ்லிம்களின் 12 அவது இமாம் மஹ்தி அலை அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ‘சமயங்களின் கண்ணோட்த்தில் இறுதி மீட்பாளரின் வருகை’ என்ற தொணிப் பொருளில் பல்வேறு சமய நிகழ்வுகள் இன்று (20) நடைபெற்றன.மேற்படி நிகழ்வானது பாலைநகர் இத்திஹாத் இஸ்லாமிய நட்புறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அகில இலங்கை அஹ்லுல் பைத் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அல்ஹாஜ் எல்.ரி.எம்.இஸ்ஸாக் மௌவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டு இமாம் மஹ்தி அலை அவர்களின் நினைவு பேருரைகளை நிகழ்த்தினார்கள்.நிகழ்வில் ஆரம்பத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியும்,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார கஸ்ரங்கள் நீங்க வேண்டியும் விசேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் மதகுருக்களான திம்புலாகல தேவாலங்கார தேரோ,மயிலங்கரச்சை கட்டுகஸ்தோட்ட மகிந்தலங்கார தேரோ,சிவஸ்ரீ க.ஜெயச்சந்திரன் குருக்கள்,போதகர் கமால் டி சுனில் ஆகியோர்களுடன் வாகரை 233 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிக்கேடியர்ஆர்.டபிள்யு,கே.கேவாகே மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.லசன்தபண்டார ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.