Sunday, January 12, 2025

முள்ளிவாய்க்காலில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயம்

Must read

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது
 விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 40க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் பலர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் போட்டிபோட்டு ஓடிய நிலைமையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Shanmugam Thavaseelan

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article