Thursday, January 23, 2025

நீர்கொழும்பு மண்ணெண்ணெய் நிரப்பு நிலையத்தில் கடும் வாக்குவாதம் மக்கள் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருப்பு

Must read





நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள மண்ணெண்ணெய் நீரப்பு நிலையத்தில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. குறித்த மண்ணெண்ணெய் நிரப்பு நிலையத்தில் மக்கள் காலை 7 மணி முதல் காத்து நின்ற போதிலும் நண்பகல் 11. 40 மணி அளவில் வரை அந்த விநியோக நிலையத்தின் உரிமையாளர் அங்கு வருகை தரவில்லை.இதன் காரணமாக ஊழியர்கள் மண்ணெண்ணையை விநியோகிக்க  முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக ஊழியர்களுக்கும்  பொதுமக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. பின்னர் 11. 40 மணி அளவில் மண்ணெண்ணெய் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கு வருகை தந்ததை அடுத்து மண்ணெண்ணைய் விநியோகிக்கப்பட்டது.  நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக தாங்கள்மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த போதிலும்  உரிமையாளருக்கு  இதுதொடர்பாக ஊழியர்கள் அறிவித்த போதிலும் அவர் அந்த இடத்திற்கு வருகை தரவில்லை எனவும் தாங்கள் கஷ்டமான காலத்தில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கூட இவர்கள் இவ்வாறு ஏன் நடந்து கொள்கின்றார்கள் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர்.
 ஆண்களும் பெண்களும் ஊழியர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். .வயதான தாயார் ஒருவர் அழுதவாறு எங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

M. Z. Sharjhan
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article