Sunday, December 22, 2024

பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மோகன் 9 மாத காலமாக விசாரணையின்றிவிளக்கமறியலில்

Must read

பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மோகன்
9 மாத காலமாக விசாரணையின்றி விளக்கமறியலில்

பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தின்கீழ் 5-5 -2021 அன்று கைது செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை மோகன் என்பவரை ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கணபதிப்பிள்ளை மோகன் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
நீதிவான் இணையவழி ஊடாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி கிராமத்தை சேர்ந்த மோகன் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும்   இதுவரை இவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article