Sunday, December 22, 2024

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

Must read

 

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம்(ஜனா), இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பா.அரியநேத்திரன், சீ,யோகேஸ்வரன், எஸ்.சிறிநேசன், முன்னாள் கிழக்குமாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, அரசியல் தலைவர்கள் உரையாற்றியதுடன், கையொப்பம் இடும் நடவடிக்கையும் நடைபெற்றது. அத்துடன் பயங்கர வாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரிஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article