Wednesday, January 22, 2025

அனைவருக்கும் குடிநீர் திட்டத்திற்காக மாங்குளத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு!

Must read

அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் மாங்குளம் நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாங்குளத்தில் இன்று(25) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

இத் திட்டமானது நீர் வழங்கல் அமைச்சின் 300மில்லியன் கட்டிட நிர்மாணத்திற்கும் மற்றும் குழாய் நீர் விநியோகத்திற்காக 500மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ளது.

இன்றைய தினம் குறித்த கட்டிட நிர்மாணிப்புக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டிடத்திற்கான அடிக்கல் என்பன கலந்துகொண்ட அதிதிகளால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் நகரிற்கான நீர் வழங்கலை உறுதிசெய்யும் நோக்குடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நிறைவேற்றப்படுகின்ற இத் திட்டமூடாக ஆயிரம் குடும்பங்களுடன் அரச மற்றும் வாணிப நிலையங்களும் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபன், நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் டி.வி.ஜி திலகசிறி மற்றும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் வி.சங்கரலிங்கம், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜி வில்வராஜா, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொதுமுகாமையாளர்(வடக்கு) ஏ.எம்.ஏ ரபீக், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொதுமுகாமையாளர்(வடக்கு) திருமதி எல்சி ஜேசுதாசன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் பணிப்பாளர் ரீ.பாரதிதாசன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், மாங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்குடன் இத் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

Shanmugam Thavaseelan

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article