சமூக ஊடகச் செயற்பாடுகளுக்கெதிரான கைதுகளை நிறுத்தி சமூக ஊடக ஊடகவியலாளர் கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெற்ற, திருமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு நீதிகோரிய அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சமூக ஊடக ஊடகவியலாளர் கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், கோசங்களும் எழுப்பப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை (24) காலை 11மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியின் முன்னிலையில் நடைபெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஞாபகார்த்த நிகழ்வையடுத்து நிகழ்வில் கலந்துகொண்டோர், ஊடகவியலாளர்களுக்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக கோஷமெழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தி அமைதிவழி போராட்டம் நடத்தினர்.
ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடக அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், சமூக ஊடகச் செயற்பாடுகளுக்கெதிரான கைதுகளை நிறுத்து, சமூக ஊடக ஊடகவியயலாளர் கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ்.ஊடக அமையம், திருமலை மாவட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த ஞாபகார்த்த நிகழ்வில் ,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஊடகவியலாளர் பா.அரியநேத்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
[24/02, 17:48] Adiran: ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை உங்களைப் பார்த்தே பரிகசிப்பதாக உணரவில்லையா? – ஜனா எம்.பி.
நீதிமன்ற அவமதிப்பினைச் செய்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே இனத்தைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாகவும்இ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாகவும் உங்கள் சட்டச் செயற்பாடுகளை நோக்கும் போது உங்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையானது உங்களைப் பார்த்தே பரிகசிப்பதாக உணரவில்லையா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்ற உரையின் போதே இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் நேற்றைய தினம் (23) பாராளுமன்ற உரை.
நாட்டில் தற்பேது நிலவும் நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுவதன் மூலம் எமது நாட்டின் இப்போதைய நிலைமைகளை எமது நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகின்றேன்.
எமது நாட்டின் வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டுமா? இல்லை இழிவாக எடுத்துரைக்கப்பட வேண்டுமா? என்ற இரு துருவ வினாக்களுக்கான விடையினை அரசாங்கமே தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னமும் காலம் முடியவில்லை. திருந்த இடமுண்டு. ஆனால், நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.
69 இலட்சம் மக்களினால் அதுவும் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்ததாகப் பெருமைப்பட்டு அனுராதபுர மகாபோதியில் இருந்து பிரகடனம் செய்து பெருமைப்பட்ட நீங்கள் இன்று உங்களது செயல்திறனற்ற நிலைமையினை அந்த 69 இலட்சம் மக்களே உணர்ந்துள்ள நிலைமையை நாடு காண்கிறது.
அரசாங்கம் என்பது ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற தூண்களில் சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான அத்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அத்திவாரம் இல்லாத கட்டடம் போல சாட்டவாக்க, நிறைவேற்று, நீதித்துறை காணப்படுகிறது.
கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அமைச்சர்களிடையே கூட்டுப் பொறுப்பென்பது இம்மியளவும் இல்லை. பாராளுமன்ற ஜனநாயக சம்பிரதாயம் நிலவும் நாடுகளில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு பாராம்பரியமாகப் பேணப்பட்டு வரும் மரபாகும். ஆனால், அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சர்களே எதிர்க்கட்சியினரைவிட மோசமாக விமர்சிக்கின்ற நிலையை இன்று நாங்கள் காண்கிறோம்.
அமைச்சரவைக் கூட்டங்களை திறந்தவெளியில் நடத்துங்கள் அதனை மக்களுக்கும் தெரிய சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புங்கள். அப்போது தெரியும் யார் புரூட்டஸ் என்பது. இல்லையெனில் அன்று எஸ்.டப்ளியூ.பண்டாரநாயக்கா கூறிய போன்று காலி முகத்திடலில் நடத்துங்கள். மக்கள் கண்ணாரக்கண்டு மகிழ்வார்கள்.
எமது நாடு மறுசீரமைக்க முடியாத, மீளக் கட்டியெழுப்பமுடியாத அதள பாதாளத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் என்றும் காணாதளவுக்கு அமைச்சர்களின் எண்ணிக்கை, இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை, செயலாளர்களின் எண்ணிக்கை, இவர்களது இணைப்புச் செயலாளர்கள், ஆலோசகர்கள், பிரேத்தியக உதவியாளர்கள் என்று அரச நிதி வீண்விரயமாகிக்கொண்டிருக்கிறது. கட்சிக் காரர்களுக்கும் அமைச்சர்களது உறவினர்களுக்கும் ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகளுக்கும் பதவிகளும், பவுசுகளும், வரப்பிரசாதங்களும் தந்து உல்லாசம் அனுபவிக்கத் தந்து, நாட்டு மக்களை சொல்லொணாத் துயரத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது இந்த அரசு.
ஆட்சியமைத்த இரு வருட காலத்துக்குள் அமைச்சரவையில் எத்தனை தடவை மாற்றங்களை செய்துள்ளீர்கள். உதை பந்தாட்டப் பந்துகூட இந்த அளவுக்கு உதைகளை பட்டிருக்காது. பசில் ராஜபக்சவினை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கும் நிதி அமைச்சராக்குவதற்கும் எத்தனை பாடு பட்டீர்கள். இதற்காக அமைச்சர் உதய கம்மம்பில எவ்வாறு பலிக்கடாவாக்கப்பட்டார். அலாவுதீனின் அற்புத விளக்கோடு அதிசய பொருளாதார மாற்றங்களினை ஏற்படுத்துவார் என்று அவரைச் சுற்றி போதி சத்துவருக்கு ஒப்பான விம்பத்தை ஏற்படுத்தினீர்கள். நடந்தது என்ன? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நிதி அமைச்சரினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுவிட்டது.
எரிபொருள் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று நாட்டில் விலை உயராத பண்டங்களும் இல்லை. சேவைகளும் இல்லை. மகிந்த ராஜபக்ச அவர்களினால் நிதி அமைச்சை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ பவித்திரா வன்னியாராச்சி அவர்களினால் சுகாதார அமைச்சினை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ கெகலிய ரம்புக்கல்ல அவர்களினால் வெகுஜன ஊடகத்துறையை நிருவகிக்க முடியாது. என்று அவர்களது அமைச்சுப் பொறுப்புக்களை மாற்றினீர்கள். ஒரு அமைச்சினை ஒழுங்காக நிருவகிக்க முடியாதவர்கள் என்று கருதியவர்களுக்கே வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளீர்கள். உங்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆலோசகர்கள், அமைச்சுக்களின் ஆலோசகர்கள் என நியமிக்கப்பட்ட நிபுணத்துவ ஆலோசகர்களினால் பெற்றுக் கொண்;ட ஒரு நிபுணத்துவ ஆலோசனையையாவது இந்த உயரிய சபையில் எடுத்துரைக்க முடியுமா?
நாட்டின் நிதிக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. மத்திய வங்கி நாணாயக் கொள்கையை திறம்படக் கையாள முடியாத