முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நெல்லிமுறிப்பு குளத்தில் காட்டுயானை ஒன்று நடக்கமுடியாத நிலையில் விழுந்து உயிரிற்கு போராடிவருகின்றது.
காலில் வெடிப்பட்ட குறித்த காட்டுயானை பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே குறித்த பகுதிக்கு வருகைதந்து குளத்தில் வீழ்ந்த நிலையில் கடந்த 18.02.2022 முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் இன்று 24.02.2022 குறித்த குளக்கரைப்பகுதியில் எழும்பி நடக்கமுடியாத நிலையில் யானை தண்ணீரில் வீழ்ந்துள்ளது.
யானைக்கான சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள்ள திணைக்கத்தினர் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டானில் உயிரிற்கு போராடும் காட்டுயானை குளத்தில் வீழ்ந்து தவிப்பு!
