மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்- வைத்தியர் ஜி.சுகுணண்
தற்போது 20 தொடக்கம் 29 வயதினை சேர்ந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருpறது. தடுப்பூசியே கொவிட் கான தீர்வாகும். ஆகவே அதனை எமது சுகாதார பணிமனைகளிலிருந்து பெறலாம் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப் பட்டுள்ளது. பொதுமக்களுக்காக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி ஏற்றும் பணிகளை விஸ்தரித்திருக்கின்றோம். மக்கள் வரும் 2 வாரங்களுக்குள் தங்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள். வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 தடுப்பூசிகளும் பெற்ற அட்டை இல்லாதவர்கள் பொது இ;டங்களில் நடமாடுவது தடை என்பதற்புரிய வரத்தமானி வெளியிடப்பட இருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒமிக்ரோன் தொற்றிலிருந்து அனைவரும் வெளிவந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் முன்வர வேண்டும்.
தற்பாது நடைபெறும் பரீட்சை காலங்களில் கொரோனா தொற்றேற்பட்ட மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்குரிய தனியான பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்நிலையம் பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் இயங்கி கொண்டிருக்கிறது. பரீட்சை எழுதும் தாணவர்கள் சுதந்திரமான பரீட்சை எழுதும் வண்ணம் தேவையான வசதிகளை நாம் கல்வி அமைச்சுடன் இணைந்து செய்திருக்கிறோம். என மாவட்ட சுகாதார வைத்தியபணிப்பாளர். வைத்தியர் ஜி.சுகுணண் இன்று அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.