அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு டிப்பர் வாகனங்கள் மற்றும் சாரதிகள் கைது !ஐயன்கன்குளம் பொலிஸார் அதிரடி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலபெருமாள்குளம் புத்துவெட்டுவான் கோட்டைகட்டியகுளம் ஆகிய பிரதேசங்களில் போலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொ.ப.சுபுன் அபேசூரிய அவர்களின் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய சோதனையில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற மற்றும் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற குற்றத்தின் அடிப்படையில் ஆறு டிப்பர் வாகனங்களும் அதனுடன் இணைந்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
தொடர்ச்சியாக ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதற்கு பொலிசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தனர்
இந்நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 3 தினங்களில் குறித்த 6 வாகனங்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஐயன்கன்குளம் பொலிசார் குறித்த வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்
சண்முகம் தவசீலன்