Thursday, January 23, 2025

கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு கூழாமுறிப்பு பாடசாலையில் அஞ்சலி  

Must read

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக் கேணியில் நேற்று  மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த  விபத்து காரணமாக உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை மாணவர்கள் இன்று  அஞ்சலி செலுத்தியுள்ளனர் .

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் நேற்றைய தினம் நான்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்திருந்தனர். படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக முல்லைத்தீவு கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை மாணவர்கள் , சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பாடசாலை  ஆசியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டனர்

Photo By – Shunmugam Thavaseelan

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article