Monday, December 23, 2024

தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை

Must read


தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பரிவிற்குட்பட்ட கிராமங்களில் விசேட டெங்கு ஒழிப்பு களப் பரிசோதனை வேலைத்திட்டம்  இன்று வியாழக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு,விணாயகபுரம், மற்றும் மீராவோடை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த காலத்தில் அதிகரித்து காணப்பட்டதனையடுத்து குறித்த கிராமங்களில் இன்று தொடக்கம் 3 நாட்க்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது.  வாழைச்சேனை சுகாதார வைத்தியஅதிகாரி தேவராஜமுதலி ஸ்டிவ் சஞ்ஜிவ்  தலைமையில் அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் ,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள்,நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் பொலிஸ்,இராணுவத்தினர்,மற்றும் பல் தேவை செயலணியினர் ஆகியோர்கள் இணைந்து வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 400 வீடுகளில் டெங்கு கள பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது சுற்றாடலை வைத்திருந்த 20  நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டது.நுளம்பு பெருகுவதனை குறைக்கவும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு பரவுவதை தடுக்கவும் சுற்றுச் சூழலில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை அகற்றி விடுமாறு அல்லது அழித்து விடுமாறும் ஒலி பெருக்கி மூலம் டெங்கு நோயில் இருந்து பொது மக்கள் பாதுகாப்பு பெறுவது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.  இதேவேளை குறித்த பிரிவில் கொழும்பில் கட்டிட கட்டுமான தொழிலுக்கு சென்ற இருவர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகி வீடு திரும்பி சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

ருத்ரா

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article