ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டினை நீக்க கோரி முல்லைத்தீவில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தினை சேர்ந்த அதிபர் சங்கம்,ஆசிரியர்சங்கம்,இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
24 ஆண்டுகளாக கோரி நிக்கும் சம்பள முரண்பாட்டினை நீக்க சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற நிலையில் இந்த அரசிற்கு ஒரு செய்தியினை சொல்லி நிக்கின்றோம். நாடு வங்குறோத்து நிலையினை அடைந்துள்ள நிலையில் நாங்கள் சம்பளத்தினை அதிகரிக்க சொல்லி கோரவில்லை 20 ஆண்டுகளுக்கு மேலாக பரித்துரைத்த சம்பளத்தினையே கோரி நிக்கின்றோம்
ஒரு சில தொழில் சங்கங்கள் எங்களை கொச்சப்படுத்திக்கொண்டிருக்கின்றன எல்லா தொழில்சங்கங்களும் சம்பளத்தினை அதிகரிக்க சொல்லித்தான் கோருகின்றது. 20 ஆண்டுகளாக அதிகரித்த சம்பளத்தினை வழங்காது இருக்கின்றது எனவே சம்மந்தப்பட்ட அனைவரும் கருத்தில் எடுத்து உடனடியாக நிலுவையாக இருக்கின்ற சம்பளத்தினை வழங்கவேண்டும் என்று கோரி இந்த கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சண்முகம் தவசீலன்