Wednesday, January 22, 2025

உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத

Must read

  

‘  உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத பணியில் இணைவோம்’       என்ற தொணிப் பொருளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21 ஆவது நினைவு நாளினை முன்னிட்டு இரத்ததான முகாம் இடம்பெற்றது. மட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனயின் ஏற்பாட்டில் அதன் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் முறக்கொட்டான்சேனை கிராம அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,செங்கலடி பிரதேச சபை தவிசாளர்.சர்வானந்தன்.மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன்,க.நல்லரெட்டனம்,க.பகிதரன்,யோகேஸ்வரன்,க.கமலநேசன்.ஆகியோர்கள் கல்ந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியமன் ,வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன் ஆகியோர்களுடன் இணைந்து இளைஞர் யுவதிகளும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் மோட்டார் சைக்கிளில் வரும்போது

கிரான் பிரதான வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

ருத்ரா

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article