காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு ஏற்படுத்தப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
நேற்று (04) மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச கட்டிடத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்
இதன் இறுதியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்
இதன்போது கருத்து தெரிவித்த அவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இன்று நேற்று அல்ல கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே என்னிடம் கூறியிருந்தார் துர்வதிஷ்டவசமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட இந்த கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது
இப்போது எமது அரசாங்கம் இந்த நிலைமைகளை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது மிக விரைவில் இந்த சந்திப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என தெரிவித்திருந்தார்
சண்முகம் தவசீலன்