Thursday, January 23, 2025

கொரோனா தொற்று – தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

Must read

lanka-ashok-leyland-bus-jaffna-town-jaffna-sri-lanka-RN8AFPகொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

இதற்கமைய தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல் அமுலாகும் வகையில் அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதொடர்பாக நேற்று நடைபெற்ற இமைச்சரவையில் மேறகொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

05. கொவிட் 19 தொற்றால் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேரூந்து போக்குவரத்தாளர்களுக்கான மானியம் வழங்கல்

கொவிட் 19 தொற்றால் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேரூந்து போக்குவரத்தாளர்களிடமிருந்து அறவிடப்படும் கீழ்வரும் கட்டணங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கட்டணம்
• தாமதக் கட்டணம்
• விலைமனுக் கோரல் கட்டணம்
• லொக் பத்திரக் கட்டணம்
• உள்நுழைதல் கட்டணம்
• அதிவேக நெடுஞ்சாலையின் தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணம்

எவ்வாறாயினும், இத்தொற்று மீண்டும் பரவுவதால் பேரூந்துப் போக்குவரத்தாளர்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால், பயணிகள் போக்குவரத்துச் சேவையை தரமாகவும் வினைத்திறனுடனும் வழங்குமுகமாக அவர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு, இவ்வருட இறுதி வரைக்கும் தொடர்ந்து இம்மானியங்களை பேரூந்துப் போக்குவரத்தாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article