Wednesday, January 22, 2025

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க அதாவுல்லாஹ் எம்.பி பங்குபற்றலில் சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தன

Must read

கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும்  நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள்  புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய  இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய  சமூக இடைவெளி பின்பற்றலுடன் கொரேனா பாதுகாப்பு நடைமுறையுடனும் இன்று(8) மாலை   சாய்ந்தமருது  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் மார்க்க சொற்பொழிவும் சாய்ந்தமருது  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்   கலந்து கொண்டதுடன் உலமாக்கள்,  அக்கரைப்பற்று மாநகராட்சி மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராஸிக், கடந்த பொதுத்தேர்தலின் தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களான சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், பிரபல உயிரியல் பாட ஆசிரியர் றிசாத் ஷரிஃப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், தே. கா முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத், பொதுச்சுகாதர பரிசோதகர்கள், குறிப்பிட்ட அளவிலான பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவை தாருஸபா பிரதானி மௌலவி சபா முஹம்மத் (நஜாஹி) அவர்களும் விசேட துஆ பிரத்தனையையை சாய்ந்தமருது  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மெளலவி எம்.ஐ. ஆதம்பாபா  (ரஸாதி) ஆகியோர்  நிகழ்த்தினர்.

Sihan (26)

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article