Sunday, December 22, 2024

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Must read

 asp (11)
காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .

33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான  வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில்   தலைமையில் செவ்வாய்க்கிழமை இன்று(10)  சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் போது சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு – செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

இதில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  -02, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -01, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -4 ,தோடம்பழம்  சுயேட்சை குழு -01 , காரைதீவு சுயேட்சை குழு 2 , என மொத்தமாக 12 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது


asp (7)
 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article