பேராசிரியர் எஸ்.விஜேச்திரன் – போதனை பல்கலைகழகம்
அரசாங்கம் மலையக மக்களை பொது சுகாதார செயற்பாடுகளின்கீழ் அல்லது கொரோனா சட்ட மூலத்தின் கீழ்மலையக மக்களை பாதுகாப்பதற்கு உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தவரும் சந்தர்பத்தில் மலையக மக்கள் பாரிய இழப்பை நோக்கி செல்லவேண்டும் என்று கூறுகின்றார் போதனை பல்கலைகழக பேராசிரியர்எஸ்.விஜேச்திரன் -;அவர்கள் மலையகத்தில்பாரிய பிரச்சனையாக மாறியுள்ள கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் மேலும்இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராசியர்.
தற்போதுஇலங்கையில் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கின்ற பெரும் நெருக்கடியான கொரோனாவின் 2ம் கட்ட அலைஎன்பது மலையகத்திலும் பெரும் பாதிப்பை மலையகத்தில் ஏற்ப்படுத்துகின்றது என்பதை அறியமுடிகின்றது. முதலாம் கட்ட கொரோனாவின் போது மலையக மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையிலும்வாழ்ந்திருக்கின் றார்கள். மலையக பிரதேசங்கலோ அல்லது தோட்ட மக்களோ பெரிதாக பாதிக்கப்படவில்லை என்பதை அறியமுடிகின்றது. ஆனால் 2ம் கட்ட அலை என்பது குறிப்பாக கொழும்புஇகம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாகமலையக பிரதேசங்களை கூட இலக்கு வைத்திருப்பதை எம்மால் அறியமுடிகின்றது. ஆகவே இன்று ஹட்டன்பொகவந்தலாவ மஸ்கெலிய வட்டகொட கொட்டகலை தலவாக்கலை போன்ற பிரதேசங்களிலே கொரோனாபாதிப்பின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுருக்கின் றது. ஹட்டன் நகரம் குறிப்பாக வர்த்தகநடவடிக்கைகள் மந்த நிலையிலே காணப்படுகின்றது.
ஆகவே இது மலையக மக்கள் மத்தியிலே பாரியநெருக்கடி தோன்றியிருப்பதை நம்மால் காணக்கூடியதாய் இருக்கின்றது. இந்த கொரோனா அலைஎன்பது மலையக மக்கள் பொருத்தவரை மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். மலையகமக்கள் வாழ்கின்ற குடியிருப்புகள் மிக நெருக்கமாக இருப்பதும் மேலும் மலையக மக்கள்வாழ்கின்ற வீடுகளில் இலய அறைகளில் போதிய இட வசதிகளை கொண்டு இல்லாமலும் மலையகத்திலேபொது சுகாதார கட்டமைப்பு என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையிலும் தேசிய சுகாதாரதிணைக்களத்தின் கீழ் மலையக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் சுகாதார கண்கானிப்பில்உட்படுத்தப்படாமல் இருப்பதும் இந்த கொரோனா பரவலின்னோடு இணைந்துப்பார்க்கின்ற போதுபாரிய அச்சுறுத்தலுக்கான சூழ்நிலையை ஏற்படுத்திறுக்கின்றது. இந்த மலையக மக்கள் வாழ்கின்றஅனைத்து குடியிருப்புகளும் 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது மட்டுமல்ல அவைகள் போதிய சுகாதாரஅமைப்போடு உருவாக்கப்பட்டவை அல்ல பொதுவான மலசலகூட பாவனை பொதுவான குடிநிர் பாவனையேகாணப்படுகின்றது.ஆகவே கொரோனாபாதிப்பினால் ஒரு குடும்பத்திலே ஒருவர் பாதிக்கப்படுகின்ற போது அவரை தனிமைப்படுத்துவதற்கான தனி அறைகளோ வாய்ப்புகளோமலையக பகுதியில் காணப்படவில்லை. ஆகவே இது கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய விடயமாககாணப்படுகின்றது. ஆகவே கொரோனா பரவல் பிரதேசத்தை மையப்படுத்தி அரசாங்கம் கொரோனாநோயாளர்களுக்கான தனியான பராமரிப்பு நிலையங்களை அரசு உடனடியாக ஏற்ப்படுத்தவேண்டுமென்றநிலைமை ஏற்ப்பட்டிருக்கின்றது.
இந்த கொரோனாபாதிப்பு என்பது மலையகத்திலே இன்னும் 2 விடயங்களை அதாவது கொள்கை சார்ந்த விடயங்களைமுக்கியத்துவம் செலுத்துகின்றது ஒன்று மலையகமக்களுக்கா தனிவீடு திட்டம் மிக விரைவாக பூர்த்திசெய்யப்படவேண்டும் என்பதும் மலையகபிரதேசங்கள் அனைத்தும் தனிவீட்டு திட்டங்கள் மூலமாக மலையக மக்களுடைய தனிமையான குடியிருப்புவாழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமாக காணப்படுகின்றது. சுகாதார பாதிப்புகள்தொற்று நோய்கள் ஏற்ப்படுகின்றபோது அந்த மக்கள் மத்தியிலே அதிகளவு பராமரிப்பதற்குஅவசியப்படுகின் றது. 2வது மலையகத்திலே மலையக குடியிருப்புகள் அனைத்தும் பொது சுகாதாரபரிசோதகரின் கீழ் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. தோட்ட வைத்தியர்கள் என்றுசொல்லப்படுகின்ற RMA என்றதோட்ட வைத்தியர்கள் இந்த கொரோனா பிரச்சினையின் போது முழுமையாக மலையக மக்களினைபாதுகாப்பதற்கான முழு தகுதியினை கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமின்றி கிரச் என்றுசொல்லப்படுகின்ற சிறுவர் பராமரிப்பு நிலையம் உத்தியோகத்தர்கள் முலமாக இந்தபிரச்சினையை கையாள முனைவதும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. தோட்ட முகாமையாளர்கள் சுகாதார சம்பந்தமான விடயங்களில் அக்கறைஉள்ளவர்களாக காணப்படுகின்றனர். அரசும் அரச அதிகாரிகளும் இந்த மலையகத்திலே பரப்புகின்றகொரோனா விடயத்திலே உதாசீனம்மான நிலைல் இருப்பதாக காணக்கூடியதாய் இருக்கின்றது.
இதனால் பொது மக்கள் மத்தியிலே பாரிய பிரச்சினையும் அச்சுருத்தலும் ஏற்ப்பட்டிருக்கின்றது. ஆகவேஇது இன்னொறு அவசியத்தையும் உணர்த்துகின்றது. மலையகத்தில் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள்அனைத்தும் பொது சுகாதார கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவது மட்டுமல்லாமல் அரசினது பொதுசுகாதார திணைக்களத்தின் நேரடியை கண்கானிக்க வேண்டும் என்பதும் ட்ரஸ்ட் நிறுவனத்தின்தோட்ட முகாமைத்துவத்தின் இருந்து தோட்ட மக்களின் சுகாதார சேவைகள் விடுவிக்கப்பட்டு அனைத்துஏனைய மக்களைப் போல பொதுவான கட்டமைப்பின் கீழ் தேசிய கட்டமைப்பின் கீழ் மக்களைகொண்டுவர வேண்டுமென்று இன்னொறு அழுத்தம் எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கின்றது.ஆகவே இதனோடு சம்பந்தப்பட்ட மலையக தலைவர்கள் அரசு அரசஉத்தியோகத்தர்கள் ஐனாதிபதி போன்றவர்கள் இந்த விடயத்திலே கவனம் செலுத்தப்படவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் இந்த கொரோனா பாதிப்பு என்பது மலையகத்திலே பாரியஅளவிலான உயிர் சேதங்களை ஏற்படுத்தும் இன்னொறு விடயத்தை நாம் கட்டாயமாக குறிப்பிடவேண்டி இருக்கின்றது. முதலாவது கட்ட கொரோனா பரவலின் போது இலங்கை பொருளாதாரநடவடிக்கைகள் ஸ்தீரமற்ற நிலையில் காணப்பட்ட போது தோட்டதொழிலாளர்கள் மட்டும் அந்தகாலங்களில் 3 மாதங்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுப்பட்டார்கள் தோட்ட உற்பத்திகள்ஏற்றுமதி செய்யப்பட்டன. அதன் முலம் அரசாங்கம் அன்னிய செலவானிகள் உடைத்துக் கொண்டிருந்தது.ஆனால் இன்று ஏற்படுகின்ற கொரோனா பாதிப்பு மலையக மக்களின் மீது பாரிய பிரச்சினையாகஇருக்கினற்து.
தோட்ட தொழிலாளர்கள் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இருந்தால்தோட்ட தொழிலாளர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியதாய் இருக்கும். காரணம் தோட்ட தொழிலாளர்கள்நாளாந்தம் வருமானத்திற்கு கூலிக்கு வேலை செய்கின்றவர்கள். ஆகவே தோட்ட தொழிலாளர்கள்இந்த 15 நாட்கள் அல்லது மாதங்கள் தனிமைப்படுத்தப்படுகின்ற போது தொழிலாளர்கள் பாரியபொருளாதார நெருக்கடிக்கு உள்ளடக்கப்படுவதன் காரணமாக எதிர்காலத்திலே இது ஒரு பாரியபிரச்சினையை ஏற்படுத்துகின்றது. ஆகவே இவற்றை கவனத்திற் கொண்டு இந்த கொரோனா பாதிப்பில் இருந்துமலையக மக்களை முழுமையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மலையகத்தை சார்ந்த அமைச்சர்கள்அதில் அக்கறை செலுத்த வேண்டி இருக்கின்றது. மலையக அரசியல் வாதிகளும் தலைவர்களும் இதில் கூட கவனம் செலுத்த வேண்டிஇருக்கின்றது. அரசு மலையக மக்களை உதாசீனம்படுத்தாது பொதுசுகாதார செயற்பாடுகளின் கீழ்அல்லது கொரோனா சட்ட மூலத்தின் கீழ் மலையக மக்களை பாதுகாப்பதற்கு உடனடியான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்பது இன்று மலையக மக்களின் எதிர்ப்பார்பாக இருக்கின்றது. என்றுகூறினார்.