முல்லைத்தீவு மாவட்டமானது இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு அழகிய மாவட்டமாகும்
இங்கே அதிகளவான மக்கள் விவசாயத் தொழிலை பிரதான ஜீவனோபாய தொழிலாக கொண்டிருக்கின்றனர் இன்னும் ஒரு பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை ஜீவனோபாய தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்ற அதேவேளை இங்குள்ள விவசாயிகளுக்கு ஏற்றால்போல் காலத்துக்கு காலம் சரியான மழை வீழ்ச்சியை வழங்கக் கூடிய வகையிலே முல்லைத்தீவு மாவட்டமானது இலங்கையில் அதிக வனப்பரப்பு கொண்ட ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது
இயற்கை வளங்கள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டமானது கடந்த 2009ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் இருக்கின்ற இயற்கை வளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு இயற்கை சூழ்நிலையை பாதிப்படைந்து வருகிறது
கிரவல் அகழ்வு, கருங்கல் அகழ்வு, மணல் அகழ்வு ,சட்டவிரோத மர கடத்தல் போன்ற பல்வேறு வகைகளிலும் காடுகள் அழிக்கப்பட்டு இலங்கையிலேயே அதிகளவான காடுகள் இருப்பதாக அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்கின்ற முல்லைத்தீவு மாவட்டம் தற்போதைய சூழலில் காடுகளின் அளவு மிக குறைந்து கொண்டு வருகின்றன
இவ்வாறான சூழ்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் தற்போது படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது
அந்த வகையிலே கடந்த 4 ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இருக்கின்ற இவ்வாறான தேக்கு மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன
குறிப்பாக இங்கே நடப்பட்டிருந்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு அரசமர கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்படாது ஏனைய இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது இதற்கு காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மரத்துக்கான தேவை தற்போதைய நிலைமையில் இல்லை என்று குறிப்பிடக் கூடிய அளவிலேயே இருக்கிறது
இவ்வாறான பின்னணியிலேயே வளவள திணைக்களமானது அரசமர கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டு இவ்வாறு விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட வந்த தேக்கு மரங்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வெட்டி அழிக்கப்பட்டு நிறைவடைந்து விட்டன
கடந்த வருடம் இவ்வாறு தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெளிவாக கருத்து தெரிவித்திருந்தார் இருப்பினும் அந்த விடயங்களையும் கருத்திற் கொள்ளாது கடந்த வருடம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட இவ்வாறான தேக்கு மரங்கள் இனிவரும் காலங்களில் வெட்டப்படுவதாக இருந்தால் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானம் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் இவற்றையெல்லாம் கடந்து எந்த விதமான மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் உடைய தீர்மானங்களும் அல்லாது வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் மீள் வனமாக்கல் என்கின்ற பெயரில் அரசமர கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களில் தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய முறிப்பு பகுதியில் 40 ஹெக்டேர் அளவில் இருக்கின்ற தேக்கு மரங்கள் வெட்டுகின்ற நடவடிக்கையானது இடம்பெற்று வருகின்றது
குறிப்பாக பொருத்தமான தேக்கு மரங்களாக இல்லாது சிறிய தேக்கு மரங்கள் ஆக இருக்கின்ற இந்த மரங்களைக் கூட மீள்வனமாக்கல் என்ற பெயரிலே திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருவதானது சூழலியலாளர்களின் விசனங்களுக்கு உள்ளாகியுள்ளது
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மீள்வனமாக்கல் என்ற பெயரிலேயே அளிக்கப்பட்ட எந்த காடுகளிலும் மீள வனமாக்க பட்டதை அவதானிக்க முடியாத நிலமையே காணப்படுகின்றது இதன் பின்னணியில் இவ்வாறு இந்த தேக்கு மரங்களையும் வெட்டி அழிப்பதானது மாவட்ட மக்களுக்கு தேவையற்ற இந்த மரங்களை வெட்டி வெளியிடங்களுக்கு அனுப்பி வைத்து இயற்கையின் சமநிலைக்கு பாதகமான வேலையை திணைக்களம் செய்கின்றதா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகின்றது
குறிப்பாக இந்த முறை முறிப்பு பகுதியில் வழங்கப்பட்ட 40 ஹெக்டேயர் பரப்பில் குறித்த அளவிற்கு அதிகமாக உள்ள தேக்கங்காடுகளில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன இவ்வாறு சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கி கொண்டு பல்வேறு அரச இயந்திரங்களின் உதவியோடு திட்டமிட்டு இந்த தேக்கு மரக்காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை சூழல் பாதிக்கப்படுகின்றது
ஒரு புறம் மணல் அகழ்வின் ஊடாக காடுகள் அழிக்கப்பட்டு கொண்டு வருகின்ற அதேவேளை இன்னொரு புறத்தில் கிரவல் அகழ்வின் ஊடாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது அதேபோன்று சட்டவிரோதமாக கடத்தல்கள் ஊடக இன்னொரு புறமாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றதன் பின்னணியில் அரச மர கூட்டுத்தாபனத்தினாலும் சட்ட ரீதியாகவும் பாரிய அளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன
தொடர்ச்சியாக இரண்டு காலப்பகுதிகளில் ஒழுங்கான மழைவீழ்ச்சி கிடைத்த முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போதைய காலகட்டத்தில் மழைவீழ்ச்சி ஒழுங்காக கிடைப்பதில்லை பல ஏக்கர் கணக்கில் காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக தற்போது மழை வீழ்ச்சியும் பொய்த்துப் போகின்றன முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாய தொழிலாக காணப்படுகின்ற விவசாயம் பொய்த்து போகின்ற நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது
எனவே இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு முல்லைத்தீவில் இடம் பெறுகின்ற இவ்வாறான சட்டவிரோதமான அல்லது சட்டப்பூர்வமான காடழிப்புக்களை ஒட்டுமொத்தமாக நிறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் வனவளத்தை பாதுகாத்து முல்லைத்தீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாய நடவடிக்கைகளுக்காக சரியான மழை வீழ்ச்சி கிடைக்கக்கூடிய வகையில் இந்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கையாக இருக்கிறது
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிய பொறுப்பிலுள்ள அரசாங்கம் முல்லைத்தீவில் காடுகள்
அழிக்கப்படுகின்ற நடவடிக்கையை தடுப்பதற்கு முன்வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்