எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்தோ அல்லது வெளியிடங்களில் இருந்தோ பொருட்க்கள் வினியோக நடவடிக்கை மற்றும் தனிநபர் போக்குவரத்து நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்பில் தலைமையில் நேற்று (28) நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்க்களை கொள்வனவு செய்பவர்களின் நலன் கருதி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களது தொலைபேசி இலக்கமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக பாதுகாப்பு தரப்பினர் இறுதி எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சாதாரண நோய்களான கடுப்பு,வலி,கை கால் குத்து,அல்சர்,கடி.போன்ற நோய்களுக்கு மருந்து எடுக்க வரவேண்டாம் என பிரதேசத்தின் உள்ள மீராவோடை வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களை கேட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறவே இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அத்துடன் கோறளை மத்தி பொலிஸ் பிரிவில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் அவதானமாக இருக்கும்படி பிரதேச பொதுச் சுகாதாரப்பிரிவினர் கேட்டுள்ளனர்.கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதாரப் பிரிவிற்குட்படட மக்கள் தங்களது வீடுகளில் இருந்து குளியலறை நீர் மற்றும் சமயலறை நீரை சட்டவிரோதமாக வடிகான்களில் வெளியேற்றுவதை நிறுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் எச்செரிக்கை விடுத்தள்ளார்.குறித்த பிரதேசத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதியினை அடுத்து மேலும் 60 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன் இறுதி பரிசோனை முடிவுகள் பெறப்படவில்லை.