Thursday, March 28, 2024

ஊடக நல்லிணக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக யாழ் நூலகத்துக்கு நூல்கள் கையளிப்பு

Must read

books-to-Jaffna-library-1தெற்கிலிருந்து வடக்குக்கு வாருங்கள் ஒன்றாய் சுவாசிப்போம் என்ற தொனிப்பொருளில் மார்ச் மாதம் 26முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற வடக்குக்கான நல்லிணக்க ஊடகப்பயணத்தின் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தெற்கு ஊடகவியலாளர்கள் சேகரித்த ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தெற்கு ஊடகவியலாளர்கள் சேகரித்த புத்தகம் பொட்டலங்கள் தங்கள் ஒற்றுமையைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரண ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், தெற்கிலிருந்து வருகைதந்திருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும் பங்கேற்றனர்.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரண ஆகியோரிடமிருந்து நூல்களை யாழ்ப்பாண நூலகத்தின் நூலகர் பெற்றுக் கொண்டார்.
books-to-jaffna-library-2
யாழ். நூலகம் 1933ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.

 

தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்மையான பொது நூலகமாக யாழ் நூலகம் விளங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் உலகின் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காதவையாகும்.

இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என்றெல்லாம் பல்வேறு துறை சார்ந்த பெறுமதியான நூல்கள் அங்கே இருந்தன.

Jaffna library 2016 March

யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள கல்விமான்கள். புத்திஜீவிகள், பேரறிஞர்கள், நலன் விரும்பிகள் போன்றோரால் அன்பளிப்பு செய்யப்பட்ட பெறுமதியான நூல்கள் அங்கு இருந்தன.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள் 1800 களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் பொது நூலகம் சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

நூலகம் எரிக்கப்பட்டமை இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாத காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article